//
தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி மாளிகை நிழற் சாலையில் 25.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் 2200 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஐ.ஜி சொக்கலிங்கம், மிறிஷி, மற்றும் துணை ஆணையாளர் பொன்கார்த்திக் குமார், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ஐ. ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இதில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய இரும்பு மனிதன் ஜி.கண்ணன் அவர்களுக்கு தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் 2024&க்கான வீர ரத்னா விருதும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது. இந்த மாபெரும் விழிப்புணர்வு மாரத்தானை கலாநிதி ஒருங்கிணைப்பு செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார்.