சாலையில் புதைந்த சரக்கு லாரி! 

 

அண்ணாநகர் சாந்தி காலனி 5வது மெயின் ரோட்டில் பள்ளம் தோண்டி சரிவர மூடாத காரணத்தால் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு ஏற்றிச் சென்ற மினி லாரியின் டயர் சாலையில் புதைந்தது. இதனால் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஆவடியில் இருந்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் புதைந்த மினி லாரி மீட்கப்பட்டது. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com