சுவாமி திருக்கல்யாணம் 

 

மேற்கு முகப்பேர் 2வது பிளாக்கில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியஸ்வாமி திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. முருகன் கிழவேடத்திலும், விநாயகர் யானையாக வந்து வள்ளியைத் துரத்திய பின் முருகன் தன் திவ்ய ரூபம் காட்டி வள்ளியை விவாகம் புரிந்தது என உள்ளம் கவரும்படி விழா சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளி தேவசேனாவுடன் "பொன் ஊஞ்சலில்" கம்பீரமாக காட்சி தந்தார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com