சலாம் சென்னை 

 

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சார்பில் கொரோனா காலகட்டத்தில் மக்களை காக்கும் பணியில் முன்னின்று சேவையாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் "சலாம் சென்னை" என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்று நடித்த இந்த குறும்படத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தெற்கு கூடுதல் ஆணையர் தினகரன், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், கூடுதல் ஆணையர் தலைமையகம் அமல்ராஜ், கிழக்கு இணை ஆணையர் சுதாகர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com