ஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் 

 

அம்பத்தூர் தொழிற் பேட்டையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடஙகு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானத்திற்கு வழியில்லாமலும், உணவிற்கு வழியின்றியும் அவதிப்பட்டு வந்தனர். அவ்வப்போது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 600 பேர் பரிசோதனை செய்யப்பட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை போக்குவரத்து பணிமனை அருகில் இருந்து வியாழனன்று (மே 14) தனியார் பேருந்து மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com