“மாஸ்க் இல்லையா, வாங்க கொரோனா டெஸ்ட்டுக்கு..!” 

 

சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அம்பத்தூர் மண்டலம் முகப்பேர் மேற்கு 91-வது வார்டில், மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகே காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. சிலர் பீதியுடன் வந்து தங்களது விவரங்களை பதிவு செய்து கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டனர். “டெஸ்ட் எடுத்தவர்களுக்கு அதிகபட்சம் 3 நாட்களுக்குள், ரிசல்ட் அவர்களது செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும்” என்கிறார் மாநகராட்சி அதிகாரி. கொரோனா பயம் கொஞ்சமும் இல்லாமல் ஜாலியாக மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றித்திரிந்தவர்களை தடுத்து நிறுத்திய மாநகராட்சி பணியாளர்கள், ஸ்பாட் ஃபைனாக ரூ.200 வசூலித்தனர். “மாஸ்க் இல்லைனா, நிச்சயம் கொரோனா டெஸ்ட் தான்”னு மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் மாஸ்க் அணியாமல் வருவர்களுக்கு பொருட்களை விற்றவர்களிடம் ரூ.500 ஃபைன் வசூலித்தனர். “இனி சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்க வேண்டும்” என கடை உரிமையா ளர்களை கேட்டுக் கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com