கொரோனா போராட்ட வீரர்களுக்கு பாராட்டு. 

 

சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலமான அம்பத்தூர் பகுதியில் 91வது வட்டத்தின் சார்பில் முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன் தனது சொந்த செலவில் கொரோனா போராட்ட வீரர்களான நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியலிங்கம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களை கௌரவிக்கும் வகையில் மலர்மாலை அணிவித்து தனது பாராட்டும் நன்றியும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் , அவர்களுக்கு அப்பகுதி அரிமா சங்கத்துடன் சேர்ந்து 300 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தூய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கே.வி. திலகர், வேல்ராஜ், சாந்தமூர்த்தி, ரோமியோ, அரிமா சங்கத்தைச் சார்ந்த பரணிதரன்ச் போஸ் ச் மற்றும் சுகாதார பணி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

 
 
 
 
Copyyright©mogappairtimes.com