மீண்டும் கொரோனா பிடியில் நொளம்பூர் 

 

கொரோனா பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நொளம்பூர் பகுதி, தற்போது மீண்டும் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளது. ஒரு பகுதியில் 5க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அந்த பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாநகராட்சி அறிவிக்கும். அந்த வகையில் இரண்டு வாரத்திற்கு முன்பு, சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாநகராட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கோடம்பாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மற்றும் நொளம்பூர் பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் நொளம்பூர், முகப்பேர் பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அதிகளவில் நடத்தப்படுகின்றன..

 
 
 
 
Copyyright©mogappairtimes.com