அயப்பாக்கத்தில் அத்திவரதர் 

 

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ ஆனந்த வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2ம் சனிக்கிழமையை முன்னிட்டு 13 அடி உயர ஆனந்த வெங்கடேச பெருமாள் பச்சை பட்டு உடுத்தி மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த கோவிலில் அத்திவரதரை போல் 15 நாட்கள் சயனக்கோலத்திலும், 15 நாட்கள் நின்ற கோலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதை அறிந்த மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆனந்த வெங்கடேச பெருமாளையும், அத்திவரதரையும் தரிசனம் செய்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com