முகப்பேரில் முப்பெரும் விழா 

 

முகப்பேர் மேற்கில் அமைந்துள்ள அமுதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கவிஞர் மணிஎழிலனின் மலர்க்கண்ணன் பதிப்பகம் நடத்திய முப்பெரும் விழா நடைபெற்றது. கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப் போராளிகளாக பணியாற்றிய பல்வேறு துறையினருக்கு “சேவைச் செம்மல்” விருது வழங்கும் விழா, மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் 10 நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் “கூட்டாஞ்சோறு” பத்திரிகை அறிமுக விழா என மூன்று விழாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றன. விழாவில் நக்கீரன் கோபால், ‘கலைமாமணி’ ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ‘நமது நகரம்’ ஆசிரியர் சரவணன், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com