நுண்ணுயிரி படம் சேகரிப்பில் மாணவி உலக சாதனை 

 

நுண்ணுயிரி படங்கள் சேகரிப்பில், உலக சாதனை படைத்த, சென்னை மாணவி ஷர்மிளாவை பலரும், பாராட்டி வருகின்றனர். மணலிபுதுநகரை அடுத்த புதுநாப்பாளையத்தைச் சேர்ந்த, உலகநாதனின் மகள் ஷர்மிளா, தனியார் கல்லூரியில் நுண்ணுயிரியல் பிரிவில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் மாற்ற நினைத்த மாணவி, ‘மைக்ரோ ஸ்கோப்’ வழியாக, 17 ஆயிரத்து, 17 நுண்ணுயிரிகளின் படங்களை சேகரித்துள்ளார். மண், உப்பு, பாசி, காளான், மலர், விதைகள், இலை, வேர், காய்கறி, ஒட்டுண்ணி, தவளை, பாம்பு தோல், பறவையின் இறகுகள் உள்ளிட்டவைகளில் இருந்து, இந்த நுண்ணுயிரிகளை, மைக்ரோ ஸ்கோப் வழியாக மூன்று மாதங்களில், படங்களாக சேகரித்துள்ளார். மாணவியின் சேகரிப்பை ஆய்வு செய்த, ‘நோபல் வேல்ட் ரெக்கார்ட்’ நிறுவனம், அறிவியல் பிரிவில், நுண்ணுயிர் இருப்பில் அதிகபட்ச சேகரிப்பு, 17 ஆயிரத்து 17 என்ற தலைப்பில் அங்கீகரித்துள்ளது. மாணவியின் வீட்டிற்கே சென்ற, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com