அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் 324 ஆவது மாதாந்திர கூட்டம் 

 

அண்ணாநகர் த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 20-01-2019 அன்று தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமழவேள் சிவாலயம் மோகன் அவர்கள் கலந்து கொண்டு தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள், என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். முன்னதாக நமது சங்கத்தின் புரவலர் திரு. ஜிஸிஇராசு அவர்களின் துணைவியார் சஞ்சீவிபாய், மூத்த தமிழறிஞரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் க.பா.அறவாணன் ஆகியோர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் அரிமா துரை.சுந்தர்ராஜலு வரவேற்புரை ஆற்றினார். தலைவர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார். பின்னர் முனைவர் பு.பி. இராமசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்த்து.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com