பணியைத் தொடரும் தமிழ்ச்செல்வன் 

 

கடந்த முறைசென்னை மாநகராட்சி ஏழாவது மண்டலம் 92வது வட்டத்தின் மாமன்ற உறுப்பினராக தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பணிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் மீண்டும் தேர்தல் வராத நிலையில் தற்போது இந்த பகுதிக்கு மாமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை. மக்கள் பணிகள் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை இதை கருத்தில் கொண்டு அப்பகுதியில் இப்பெரு நோயின் தாக்குதலில் இருந்து மக்களை விடுவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து முன்னால் மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அப்பகுதியின் அனைத்து இடங்களுக்கும் திறம்பட செய்து வருகிறார். இதை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்

 
 
 
 
Copyyright©mogappairtimes.com