மாஸ்க் இல்லையா டெஸ்டுக்கு வாங்க..! 

 

சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிதுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் அருகே முகக் கவசம் அணியாமல் சென்றவர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். முகக்கவசம் அணியாததால், அபராதம் வசூலித்ததுடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com