வாக்கு உங்கள் உரிமை! 

 

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில், “ரங்கோலி” நிகழ்ச்சி நடைபெற்றது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு இடையே வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பள்ளி மைதானத்தில், 7000 சதுர அடி பரப்பளவு கொண்ட ரங்கோலி வண்ணக் கோலம் மிகப்பிரமாண்டமாக வரையப்பட்டது. “வாக்களிப்பது உங்கள் உரிமை-உங்கள் சக்தி” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தேர்தலில் வாக்களித்து பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com