தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்! 

 

த்திரி வெயிலால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முகப்பேரில் மூன்று இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம், பன்னீர் நகர் மற்றும் முகப்பேர் மேற்கு விஜயா வங்கி அருகே என 3 இடங்களில் தண்ணீர் பந்தல்களை சமூக சேவகர் கே.வி.திலகர் திறந்து வைத்துள்ளார். தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில், ரோமியோ, ஞானராஜ், பாபா கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com