மலர் அலங்காரத்தில் ஆனந்த வெங்கடேச பெருமாள் 

 

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ ஆனந்த வெங்கடேச பெருமாள் மற்றும் அருள்மிகு உண்ணாமுலை அம்பிகை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 13 அடி உயர ஆனந்த வெங்கடேச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com