89 மாணவர்கள் சந்திப்பு 

 

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அருள்மிகு திருபுரசுந்தரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் 1989-ம் ஆண்டு படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் அயப்பாக்கம் ஐஸ்வர்யம் மகாலில் ஒன்று கூடினர். அப்போது ஒருவருக்கொருவர் கட்டி தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். சிலர் தங்களின் மகன், மகள்களுக்கு திருமணம் செய்து இருப்பதாகவும், சிலர் தங்களுக்கு பேரன், பேத்திகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். தங்களது நண்பர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியால் யார் என்று கேட்கும் வினோதமும் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் கல்லூரி பேராசிரியர்களையும் அழைத்து அவர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் அவர்களது வாழ்த்துகளை பெற்று, நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர். இதன் மூலம் 10 வயது குறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் நீண்ட நாட்களுக்கு பின் புத்துணர்வு பெற்றதாகவும் தெரிவித்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com